‘தோல்விக்கு பயந்து மம்தா இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்’: ம.பி. முதல்வர்
தோல்விக்கு பயந்து நட்டாவின் மீது மம்தா தாக்குதல் நடத்தியுள்ளார் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு பயந்து நட்டாவின் மீது மம்தா தாக்குதல் நடத்தியுள்ளார் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் வந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் துறைமுகப் பகுதிக்குச் சென்ற நட்டா மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கற்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை நட்டா மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது வீசி திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், நட்டா வந்த வாகனம் குண்டு துளைக்காத கவச வாகனம் என்பதால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் செளகான் கூறுகையில்,
நட்டா கார் மீது கல் வீசப்பட்டிருப்பது, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் சவப்பெட்டியின் கடைசி ஆணி என்பதை நிரூபிக்கும். இந்த தாக்குதலை மேற்குவங்கமும், நாடும் பொருத்துக் கொள்ளாது.
தோல்விக்கு பயந்து மம்தா பானர்ஜி இந்த தாக்குதலை நடத்தியுளார். இதைக் கண்டு பாஜக பயப்படாது என தெரிவித்துள்ளார்.