நடிகர் ரஜினி 
தற்போதைய செய்திகள்

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

நடிகர் ரஜினிகாந்த் நாளை 70ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் ரஜினிகாந்த் நாளை 70ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

1950ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர் நடிகர் ரஜினிகாந்த்(வயது 69). தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் இவர் நாளை தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிக்கு வாழ்ந்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

“தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி ஆரம்பிக்கும் தேதியை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT