முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் அழைப்பை ஏற்று டிச.14-ம் தேதி ஆம் ஆத்மி போராட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளின் அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தை டிசம்பர் 14ஆம் தேதி முற்றுக்கையிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் போராடும் விவசாயிகளின் அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தை டிசம்பர் 14ஆம் தேதி முற்றுக்கையிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 16வது நாளாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து, மத்திய அரசு நடத்திய பல கட்டப் பேச்சுவார்தைகள் தோல்வியடைந்த நிலையில், அரசு எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை அளித்தது. அதனை நிராகரித்த விவசாய சங்கங்கள் டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுக்கையிட அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி வெளியிட்ட செய்தியில், 

விவசாயிகள் அளித்த அழைப்பை ஏற்று, மத்திய மோடி அரசு அறிமுகப்படுத்திய புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 14 அன்று பஞ்சாப் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தை முற்றுகையிடும் என தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →