தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி அமைச்சர்கள் உண்ணாவிரதம்

ANI

தில்லியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு  வரும்   நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு விவசாய அமைப்புகள் இன்று 19 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய, சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. 

இதையடுத்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் அதிஷி மார்லேனா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT