தற்போதைய செய்திகள்

கேரள உள்ளாட்சித் தேர்தல்: நாளை(டிச.16) வாக்கு எண்ணிக்கை

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு டிச.8-ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

மொத்தம் 76.63 சதவீத பேர் வாக்களித்துள்ளனர். இதில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின. டிச.10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 76.78 சதவீதம் போ் வாக்களித்தனா். டிச.14-ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தலில் 78.62 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.98 சதவீதம் போ் வாக்களித்தனா்.

மேலும், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை எண்ணும் பணி நாளை(டிச.16) நடைபெறவுள்ளது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT