முகப்பு
தற்போதைய செய்திகள்

திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க மாநில முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
சுவேந்து அதிகாரி
பகிர்:

மேற்கு வங்க மாநில முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா்.

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களுக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த நவம்பர் 27ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியையும், நேற்று(டிச.16) சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →