மேற்குவங்கத்தின் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் 3 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் 3 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் போலநாத் பாண்டே தில்லியில் உள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்திற்கும், ராஜீவ் மிஸ்ரா இந்திய - திபெத் எல்லைக் காவல் படைக்கும், பிரவீன் திரிபாதி சேவைகள் தேர்வு வாரியத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, குறிப்பிட்ட அதிகாரிகளை சம்பந்தப்பட்ட புதிய பணிகளுக்கு விடுவிக்குமாறு மேற்குவங்க அரசிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.