படம்: டிவிட்டர் - அஸ்வினி குமார் செளபே 
தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு கரோனா

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்றால் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்,

கரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறி தெரிந்ததையடுத்து, சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்துவர்களின் ஆலோசனைப்படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT