கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இந்தியாவிலிருந்து 137 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பினர்

கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்த 137 பாகிஸ்தான் நாட்டு மக்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளதாக இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ANI

கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்த 137 பாகிஸ்தான் நாட்டு மக்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளதாக இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானில் பயிலும் மாணவர்களும், பாகிஸ்தான் குடிமக்களும் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில், அத்தாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதற்கு 137 பேருக்கு இந்திய அரசுத் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அத்தாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானிற்கு 137 பேர் சென்றுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி அருன்பால் சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT