சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, மத்திய அரசு சார்பில் சர்வதேச சிறப்பு விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
“சர்வதேச விமானங்களுக்கான தடை 2021ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் சர்வதேச சிறப்பு விமானங்கள் மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது.” எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.