கர்நாடகத்தில் 7 பேருக்கு புதிய வகை கரோனா: சுகாதாரத் துறை அமைச்சர்
கர்நாடகத்தில் இதுவரை 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இதுவரை 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
கரோனா வைரஸின் பி.1.1.7 என்று தற்போது அறியப்படும் அதிதீவிர கரோனா வைரஸ், பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகத்தில் 7 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.