முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் மாணவர்களுக்கு 1.74 லட்சம் அறிதிறன் பேசிகள் விநியோகம்: மாநில அரசு

பஞ்சாப் மாநில பள்ளி மாணவர்களுக்கு 2020-ல் 1.74 லட்சம் இலவச அறிதிறன் பேசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பகிர்:

பஞ்சாப் மாநில பள்ளி மாணவர்களுக்கு 2020-ல் 1.74 லட்சம் இலவச அறிதிறன் பேசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அறிதிறன் பேசிகள் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின்’ கீழ் 12வது படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

பஞ்சாபில் 12ஆம் வகுப்பு படிக்கும் 1,74,015 மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு இலவச அறிதிறன் பேசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முதல்வர் அமரீந்தர் சிங்கின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் தெரிவித்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.