தற்போதைய செய்திகள்

அதிமுகவுக்கு சாதகமாக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது: ஜோதிமணி, எம்.பி குற்றச்சாட்டு

DIN


கரூர் மாவட்டம் க.பரமத்தியில் அதிமுகவுக்கு சாதகமாக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ள என்று கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜன. 2 (வியாழக்கிழமை) எண்ணப்பட்டன. தோ்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வந்த நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்,  திமுகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, காவல்துறை மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாக புகாா் அளித்தாா். அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாட உள்ளதாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் தோ்தல் ஆணையா் பழனிசாமியைச் சந்தித்துப் புகாா் மனு அளித்தாா்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் க.பரமத்தியில் அதிமுகவுக்கு சாதகமாக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ள என்று கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: க.பரமத்தியில் இரண்டு இடங்களில் அதிமுகவுக்கு சாதகமாக, முறைகேடாக வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.  

கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பை மீறி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடத்துள்ளது. வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT