தற்போதைய செய்திகள்

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்றியவரின் 3 மாடுகள் உயிரிழப்பு: காரணம் என்ன?

DIN

துறையூர்: துறையூர் அருகே விவசாயி ஒருவருக்கு சொந்தமான 3 மாடுகளை தேர்தல் முன் விரோதம் காரணமாக தேர்தலில் தோற்றவர்கள் விஷம் வைத்துக் கொலை செய்திருக்கலாமென மாட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அழகாபுரியைச் சேர்ந்தவர் குப்பன் மகன்
வீராசாமி(47). இவருக்கு தனக்கு சொந்தமான 3 பசுமாடுகளை தனது வயலில் வெள்ளிக்கிழமை இரவு கட்டி விட்டு தனது வீட்டுக்கு திரும்பினார். சனிக்கிழமை காலை வீராசாமியும், அவருடைய மனைவி தனலட்சுமியும் வயலுக்கு சென்று மாடுகளுக்கு தண்ணீர் வைத்தனர். அதனைக் குடித்த 3 மாடுகளும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன.

இதனைக் கவனித்து பதட்டமடைந்த வீரசாமி பாலக்கிருஷ்ணன் பட்டி கால் நடை மருத்துவர் முருகேசனுக்கு தகவல் அளித்தார்.

அவர் நேரில் சென்று பார்த்த போது மாடுகள் சடலமாக கிடந்தன. மாடுகள்
குடித்த தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்
கூறிச்சென்றதையடுத்து வீராசாமி உப்பிலியபுரம் போலீஸில் புகார் அளித்தார்.

அதில், உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அழகாபுரி ஊராட்சி தலைவராக
தேர்வான கு. செல்லதுரைக்காக தேர்தல் பணியாற்றியதாகவும், அவர் வெற்றிப்
பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளரில் ஒருவர் தனது மாடுகள் குடிக்கிற தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்றுக் கூறியிருந்தார்.

இதனையடுத்து போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மாட்டு உரிமையாளர்
உயிரிழந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்த பின்னர் அந்தப் பகுதியில்
புதைத்தார்.

இந்த நிலையில் மாடுகளுடைய பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பிக்கபடும் என்று உப்பிலியபுரம் போலீஸார் கூறினர்.

விவசாயி ஒருவரின் 3 பசுமாடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த பகுதியில்
பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT