தற்போதைய செய்திகள்

நாட்டில் இதுவரை 90.56 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

DIN



புதுதில்லி: நாட்டில் இதுவரை 90.56 லட்சம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,29,588 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. 434 பலியாகி உள்ளதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 17,834  ஆக உயர்ந்துள்ளது. 2,26,947 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,59,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 90,56,173 க்கும் அதிகமான கரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,29,588 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  பரிசோதிக்கப்பட்டன.

சோதனைத் திறனை அதிகரிக்கும் முயற்சியாக, அரசு பொது ஆய்வகங்கள் (730) மற்றும் தனியார் ஆய்வகங்கள் (270) என மொத்தம் 1,000 கரோனா சோதனை ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஆர்டி-பிசிஆர் ஆய்வகங்கள் (557); ட்ரூநாட் ஆய்வகங்கள் (363) மற்றும் சிபிஎன்ஏடி ஆய்வகங்கள் (80) ஆகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT