தற்போதைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN


சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு நள்ளிரவு வந்த அழைப்பில் பேசியவர்  நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு வைத்துள்ளார். 

இதையடுத்து,  விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. 

மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT