தற்போதைய செய்திகள்

திருச்சியில் ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN


திருச்சி: ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து திருச்சியில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலர் பா. லெனின் தலைமை வகித்தார். ரயில்வே துறையில் பணியிடங்களை குறிப்பிடாமல் தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 

இளைஞர்களுக்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். ரயில் வழித்தடங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT