முகப்பு
தற்போதைய செய்திகள்

என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலருக்கு கரோனா

புதுச்சேரியில் வசித்து வரும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் அவர்களுக்கு கரொனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலருக்கு கரோனா
பகிர்:

புதுச்சேரியில் வசித்து வரும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் அவர்களுக்கு கரொனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருப்பவர் பாலன் (வயது 67). இவர் கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நியமன எம்எல்ஏவாகவும், ஏஎப்டி மில் சேர்மனாவும் பதவி வகித்தார்.

தற்போது இவர் முதலியார்பேட்டையில் உள்ள உழந்தைகீரப்பாளையம், தியாகி அன்சாரி துரைசாமி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் தனியார் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →