தற்போதைய செய்திகள்

திருப்பூர் அருகே பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


திருப்பூர்: திருப்பூர் அருகே பாலை முழுவதுமாகக் கொள்முதல் செய்யக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் கொண்டு வரும் பாலின் 20 சதவீதத்தை கடந்த புதன்கிழமை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, பால் உற்பத்தியாளர்கள்சங்கத்தின் சேடர்பாளையம் பால் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக துணைத்தலைவர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்றவர்கள் கூறுகையில், நாங்கள் கொண்டு வரும்பாலை ஊழியர்கள் முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல் 20 சதவீதப் பாலை திருப்பி அனுப்புவதால் நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே, சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் முழுப் பாலையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.கொளந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT