தற்போதைய செய்திகள்

திருப்பூரில் குளிர்சாதனம் பயன்படுத்திய உணவகத்துக்கு அபராதம்

DIN

திருப்பூரில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்திய தனியார் உணவகத்துக்கு பறக்கும்படை குழுவினர் வியாழக்கிழமை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, சீல் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி 3 ஆவது மண்டல பறக்கும்படை குழுவினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில் திருப்பூர், தெற்கு மண்டல துணை வட்டாட்சியர் டி.அருள்குமார் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் கேசவன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் அந்த உணவகத்தில் ஆய்வு நடத்தினர். இதில், உணவகத்தில் குளிர்சாதன வசதி பயன்படுத்தப்பட்டதும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒரே டேபிளில் 4 பேரை அமர வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உணவக மேலாளரை எச்சரித்த பறக்கும்படை குழுவினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், உணவகத்துக்கு வரும் அனைவரையும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கியதுடன், இதே தவறை மீண்டும் செய்தால் உணவகத்துக்கு  சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT