முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை நெல்பேட்டை மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

தளர்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி மதுரை நெல்பேட்டை மீன் மார்க் கெட்டில் சனக்கிழமை கூட்டம் அலைமோதியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
பகிர்:

தளர்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி மதுரை நெல்பேட்டை மீன் மார்க் கெட்டில் சனக்கிழமை கூட்டம் அலைமோதியது.

கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் நாளை தளர்வு இல்லாத பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. பால் வினியோகம், மருந்து கடைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆகவே, அத்தியாவசிய பொருட்களான மளிகை காய்கறி வாங்குவதற்காக  ஏராளமான கூட்டம் கடைவீதிகளில் இருந்தது. 

அசைவம் சாப்பிடுவோர் வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில்  இறைச்சி சமைப்பது வழக்கமாகிவிட்டது. கரோனா பொது முடக்க காலத்தில் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடுவதால் தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்தது.

இதனால் கடந்த சில மாதங்களாகவே மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அசைவப் பிரியர்கள் சனிக்கிழமையே இறைச்சி கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

தற்போது ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு  இல்லாத பொது முடக்கம் அமல் படுத்தப்படுவதால் சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.

அதன்படி மதுரையில் நெல்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஏராளமானோர் மீன் வாங்குவதற்காக சனிக்கிழமை குவிந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →