தற்போதைய செய்திகள்

பிளஸ் 1 தேர்வு: ஈரோடு மாவட்டம் 6 ஆம் இடம்

DIN

ஈரோடு:  பிளஸ் 1 தேர்வில்  ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 6 ஆம்  இடத்தை பிடித்துள்ளது.              

பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம்  4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 213 பள்ளிகளைச் சேர்ந்த 10,946 மாணவர்களும் 12,388 மாணவிகளும் என மொத்தம் 23,334 பேர் தேர்வு எழுதினர்.

பிளஸ்1 பொதுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில்  97.39 சதவீதம் மொத்தம் தேர்ச்சி பெற்று மாநில  அளவில் 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தேர்வு எழுதிய 10,946 மாணவர்களில் 10,594 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 12,388 மாணவிகள் தேர்வு எழுதியதில் 12,130 பேர் மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 23,334 பேர் தேர்வு எழுதியதில் 22,324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.    

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ்  1 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில  அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

SCROLL FOR NEXT