தற்போதைய செய்திகள்

காரைக்குடி கம்பன் கழகத்தை தோற்றுவித்த கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 112 -வது பிறந்த நாள்

காரைக்குடி கம்பன் கழகத்தை தோற்றுவித்த கம்பன் அடிப்பொடி சா. கணேசனுக்கு சனிக்கிழமை112 -வது பிறந்த நாள்.

DIN

காரைக்குடி கம்பன் கழகத்தை தோற்றுவித்த கம்பன் அடிப்பொடி சா. கணேசனுக்கு சனிக்கிழமை112 -வது பிறந்த நாள்.

வலைதளம் மூலம்  கம்பராமாயணம் சொற்பொழிவை தொடரும் காரைக்குடி கம்பன் கழகத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 1939 ஆம் ஆண்டு தொடங்கியவர் 'கம்பன் அடிப்பொடி' என்ற அழைக்கப்படும் சா. கணேசன். இவர்  6.6.1908 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு சனிக்கிழமை ஜூன் 6, 112 - வது பிறந்த நாளாகும். தாய்க் கழகமாம் காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகத்திலிருந்து தான் இன்றைக்கு நூற்றுக்கணக்கான கம்பன் கழகங்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பல மாநிலங்கள், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30 கம்பன் கழகங்கள்தான் நல்ல நிலையில் செயல்பட்டு கம்பன் புகழ் பாடி வருகின்றன. 

காரைக்குடியில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடைபெறுவது வழக்கம். அதுவும் சில ஆண்டுகளாக இரண்டு இடங்களில் கம்பன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு போன்ற காரணங்களால் கம்பன் திருநாள், கம்பன் திருவிழா என இரண்டுமே நடத்த முடியவில்லை.   

இந்த நிலையில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தலைவராகவும், பேராசிரியர் மு. பழனியப்பன் செயலாளராகவும் உள்ள கம்பன் கழகம் தொடர்ந்து கம்பன் புகழ் பரப்பும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வலைதளத்தில் (யூடியூப்) பல்வேறு அறிஞர்கள் பேச்சுரையை பதிவேற்றம் செய்து கம்பன் ஆர்வலர்களின் இலக்கிய தாகத்தை தணித்து வருகின்றனர். 

இக்காப்பியம் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும், 10,368 பாடல்களையும் கொண்டுள்ள. மிகைப்பாலங்களாக 1293 பாடல்கள் உள்ளன. கம்பராமாயணத்தில் 118  படலங்கள், ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள கம்பன் பாடல்களை தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் தங்களது உரையை பதிவு செய்து கம்பன் கழக தலைவர் பழ. பழனியப்பனுக்கு அனுப்புகின்றனர். அதனை சரி பார்த்து செயலாளர் மு. பழனியப்பன் தொழில்நுட்ப உதவியுடன் வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT