தற்போதைய செய்திகள்

கோவை நகரின் முக்கிய சாலைகளில் மது பாட்டில்கள்: பெண்கள், குழந்தைகள் அச்சம்

கோவை நகரின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸின் டிஆர்ஓ காம்பவுண்ட் செல்லும் சாலைகளில் இரவு நேரங்களில் மது, உணவுகளை அருந்திவிட்டு

DIN


கோவை நகரின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸின் டிஆர்ஓ காம்பவுண்ட் செல்லும் சாலைகளில் இரவு நேரங்களில் மது, உணவுகளை அருந்திவிட்டு சாலைகளில் பாட்டில்களை வீசி செல்வதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்திலே சென்று வருகின்றனர்.  

கோவை நகரின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி,  மாவட்ட வன அலுவலர் வீடு மற்றும் ஐஜி அலுவலகம், அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. 

இந்த மத்திய பகுதியில் டி ஆர் ஓ காம்பவுண்ட் அருகே மாவட்ட வன அதிகாரி வீட்டருகே ஒரு தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். ஆனால் இந்தக் கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லை. இங்கு வருபவர்கள் அனைவரும் விஐபி ஆக உள்ளனர். இவர்கள் வரும் கார்கள் அனைத்தும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில்தான் பார்க்கிங் செய்கிறார்கள். 

அதுமட்டுமில்லாமல் டிஆர்ஓ காம்பவுண்ட் செல்லும் சாலையிலும் மாவட்ட வன அதிகாரி வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பார்க்கிங் செய்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் கார்களில் மது பாட்டில்களை வாங்கி வந்து ஓட்டல்களில் உணவுகளை வாங்கி கொண்டு அங்கேயே உட்கார்ந்து கார்களில் அமர்ந்து மது அருந்திக் கொண்டும் சாலைகளில் பாட்டில்களை வீசி செல்கின்றனர் ஆகையால் அங்கு செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. 

குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த இடங்களுக்கு காவலர்கள் ரோந்து வருவதில்லை. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது. எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT