தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் தேமுதிக சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நிவாரணப் பொருள்கள்

கடலூர் தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

சிதம்பரம்: கடலூர் தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சிதம்பரம் மேலரத வீதியில் கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் சிதம்பரம், அண்ணாமலை நகர், வல்லம்படுகை, பி. முட்லூர், கிள்ளை,புதுச்சத்திரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் அவசர ஊர்தி எண் 108 வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.முகமது அயூப், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பானுசந்தர், சமூக ஆர்வலர் தில்லை சீனு, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இரா.மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினர். 

நிகழ்ச்சியில்  மாவட்ட  மாணவரணி செயலாளர் கே.செல்வகுமார், மாவட்ட தொண்டரணி செயலாளர் சுரேஷ், சிதம்பரம் நகர  பொருளாளர் கலைப்புலி ப.கணேசன், நகர துணை செயலாளர்கள் த.பி. ஐயப்பன், ப.சுரேஷ், ஏ.பி.மணிகண்டன், முரசு சங்கர், சி. முட்லூர் கிளை செயலாளர் மணிமாறன், கிளைத் தலைவர் இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பானுசந்தர் செய்து இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT