சென்னையில் சுமார் 34 நாள்களுக்குப் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்து, வாகனங்கள் போக்குவரத்து முடங்கியது. இதனால் தினந்தோறும் விலைமாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் எரிப்பொருள்கள் விற்பனை விலையில் பெருத்த மாற்றமின்றி குறைந்து விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தில் பல தளர்வுகளை அறிவித்ததை அடுத்து லாரி, வேன், கார் போன்ற வாகனங்களின் போக்குவரத்து செயல்படத் தொடங்கியது
இந்நிலையில், சென்னையில் சுமார் 34 நாள்களுக்குப் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 -க்கும், டீசல் லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.