தற்போதைய செய்திகள்

மேட்டூர் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து: காரில் சென்ற 4 பேர் காயம்

மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே பேருந்தின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற நான்கு பேரும் காயமடைந்தனர். 

DIN

மேட்டூர்: மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே பேருந்தின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற நான்கு பேரும் காயமடைந்தனர். 

சேலம் செவ்வாய்பேட்டை சேர்ந்தவர் விஜயராஜ் இவரது மனைவி இந்திரா (73), ஓமலூரை சேர்ந்த பால்ராஜ் (65), தானம் (50), ஜெயந்தி (60) இவர்கள் நான்கு பேரும் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு காரில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்திற்கு பிறகு மீண்டும் காரில் சேலம் திரும்பினார்கள். 

கார் மேச்சேரி அருகே உள்ள எம் காளிப்பட்டி வேகத்தடை அருகே சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற தனியார் பேருந்தின் பின்புறமாக வேகமாக சென்று மோதியது. இதில் காரில் சென்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து மேச்சேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

SCROLL FOR NEXT