தற்போதைய செய்திகள்

தேனியில் விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

DIN


தேனியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை, அரசு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தேனி, நேருசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இதில், வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம்,  விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் சேவைகள் மீதான அவசரச் சட்டம் ஆகியற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை தேனி காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, சின்னமனூர், உத்தமபாளயம், கம்பம் ஆகிய இடங்களிலும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT