தற்போதைய செய்திகள்

ராமேசுவரத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர்  மட்டும் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று மீனவர்களை மீட்கக் கோரி உறவினர்கள் மீன்வளத்துறை டோக்கன் வ

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர்  மட்டும் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று மீனவர்களை மீட்கக் கோரி உறவினர்கள் மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து கடந்த சனிக்கிழமை 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. இதனையடுத்து, படகு உரிமையாளர் மாயமான விசைப்படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆனந்த் (எ) சுஜிந்திரா(19), ஜேசு(60) மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர் போராட்டங்களை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோட்டை பட்டணம் மீனவர்கள் கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜேசு என்ற மீவைரை மீட்டு அழைத்து வந்தனா.

இதனையடுத்து மீதமுள்ள மூன்று மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள மீன் வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் டோக்கன் வழங்கும் அலுவகம் மூடப்பட்டது.

மீன்பிடிக்க அனுமதிக்கும் டோக்கன் வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT