தற்போதைய செய்திகள்

மணப்பாறையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள்

மணப்பாறையில் கிராம கிராமமாக சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கினார் அமைச்சர் வளர்மதி.

DIN

மணப்பாறையில் கிராம கிராமமாக சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கினார் அமைச்சர் வளர்மதி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரமின்றி வறுமையில் இருந்த பொதுமக்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பங்கேற்று ஊராட்சியில் உள்ள 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிராம கிராமமாக சென்று நிவாரண தொகுப்புகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, அதிமுக மாவட்ட பொருளாளர் எம்.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் எம்.பி.வெங்கடாச்சலம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT