தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,003 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு  ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.54 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2003 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.96 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT