முகப்பு
தற்போதைய செய்திகள்

காலாவதியான மாத்திரைகள் வழங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளால் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் காலாவதியான மாத்திரைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் காலாவதியான மாத்திரைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சோளிங்கர் 4-ஆவது வார்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக செவிலியர் ஒருவருக்கு கரொனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை முழுமையாக தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருடன் தொடர்பில் இருந்த ஐந்து வீடுகளை தனிமைப்படுத்தியுள்ளனர். 

இந்தநிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக ஜிங்க் உள்ளிட்ட சத்து மாத்திரைகள் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத்திரைகள் காலாவதியாகி இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் தெரிவித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தாங்கள் வழங்கிய சத்து மாத்திரைகளை திரும்பப் பெற்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →