தற்போதைய செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண் மருத்துவருக்கு கரோனா

DIN


திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த இரண்டு பெண் மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு இயங்கி வருகிறது. இங்கு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா தொற்று பாதித்தோர் மற்றும் விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளில் தொற்று பாதித்தோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா வார்டில் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள்,செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் 24 மணிநேரமும் பணிபுரிந்து வருகின்றனர். நாளொன்றுக்கு 4 குழுக்களாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். 

திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 189 ஆக உயர்ந்துள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனையின் நுண்கதிர் துறையில் ஸ்கேனிங் பிரிவில் பணியாற்றி வரும் அரசு பெண் மருத்துவர் ஒருவருக்கும், இதே வார்டில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

கரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி ஒருவருக்கு ஸ்கேன் செய்தபோது இந்த தொற்று பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதேபோல, அந்த கர்ப்பிணிக்கு பயிற்சி மருத்துவர் ஊசி செலுத்தும்போது பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உடனடியாக கரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT