தற்போதைய செய்திகள்

கரோனா: இந்தியாவில் பலி 12,573 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,80,532 -ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

DIN

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 13,586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,80,532-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 8-ஆவது நாளாக பெரிய அளவில்13,586-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,63,248 போ் சிகிச்சையில் உள்ளனா். 2,04,711 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

மகாராஷ்டிரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,20,504 ஆகவும், பலி எண்ணிக்கை 5,751 -ஆக உள்ள நிலையில் தொற்று பாதிப்பில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,838 -ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 52,334  ஆகவும், நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் தேசிய தலைநகரம் தில்லியில் இதுவரை  49,979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT