தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் நான்கு அடி குறைந்தது

DIN


மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக இருந்தது. துவக்கத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2037 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.  

ஜூன் 12 ஆம் தேதி 101.73 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.98 அடியாக சரிந்தது. கடந்த 7 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3.75அடி சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 97.98 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2037 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.25 டி.எம்.சியாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT