ஏடிஎம் காவலாளி தாக்கிய வழக்கில் ஈரோட்டில் 4 பேர் கைது
ஈரோட்டில் ஏ.டி.எம் மில் கும்பலாக பணம் எடுக்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய ஏ.டி.எம் காவலாளியை அடித்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு: ஈரோட்டில் ஏ.டி.எம் மில் கும்பலாக பணம் எடுக்க வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய ஏ.டி.எம் காவலாளியை அடித்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு திருநகர்காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன் தினம் இரவு காவலாளி கார்த்திகேயன் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இரவில் பணம் எடுக்க நான்கு நபர்கள் வந்துள்ளனர். நான்கு பேரும் ஒரே நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் நுழையந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த கார்த்திகேயன் நான்கு நபர்களையும் அழைத்து ஒரு ஒருவராக சென்று தான் பணம் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.குடிபோதையில் இருந்த நான்கு நபர்களும் காவலாளி காரத்திக்கேயனை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த காவலாளி கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஈரோடு கிருஷ்ணாம் பாளையம் சேர்ந்த விக்னேஷ், தேவா, முரளிதரன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் உள்பட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.