முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த இருவருக்கு கரோனா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்னையிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த 36 வயது வாலிபர் மற்றும் 15 வயது சிறுவனுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதிய

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்னையிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த 36 வயது வாலிபர் மற்றும் 15 வயது சிறுவனுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்னையிலிருந்து 15 வயது சிறுவன் ஒருவன் மற்றும் 36 வயது வாலிபர் ஒருவர் ஆகியோர் வந்துள்ளனர். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை வருவாய்த்துறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அந்தத் தகவலின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் சிறுவனையும் வாலிபரையும் அழைத்து விசாரணை நடத்தி ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் சென்னையில் இருந்து எந்த வாகனத்தில் வந்தனர், உடன் யார் யார் வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தொற்று உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.