முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 22 ஜூன், 2020 at 11:39 AM
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜூன் 12 ஆம் தேதி, காவிரியில் தண்ணீர் திறந்த பிறகும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததை கண்டித்தும், விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாததால், காய்கறிகளை தரையில் கொட்டியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. 

சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.