தற்போதைய செய்திகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற தூய்மைப் பணியாளர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் நடராஜன்(60). தூய்மைப் பணியாளர். அவரது மகன் தமிழரசன். இருவரும் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் வந்தனர்.

திடீரனை நடராஜன் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

 சாலை விபத்தில் காயமடைந்த அவரது மனைவி பூங்கோதையை சிகிச்சைக்காக திருச்சி தில்லைநகர் 6 வது கிராஸில் உள்ள தனியார் மருத்துவ மனையில் (ஸ்டார் கிங்ஸ்) சேர்த்தாராம். 

அவருக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு தொகை மூலம் கட்டணம் எடுத்துக்கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறினராம்.

 இந்நிலையில் பூங்கோதைக்கான சிகிச்சை காப்பீட்டில் வராது என மருத்துவமனை நிர்வாகம் கூறியதோடு முழு பணத்தை கட்டினால் தான் சிகிச்சை செய்ய முடியும் என கூறிவிட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக இருமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை இல்லை. 

எனவே விரக்தியில் இம்முடிவு எடுத்ததாக இருவரும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

அல்கராஸ், பாலினி முன்னேற்றம்

லாரி - வேன் மோதல்: உ.பி.யைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT