தற்போதைய செய்திகள்

சென்னை நகரில் 2.5 லட்சம் வீடுகள் அரசின் தீவிர கண்காணிப்பில் உள்ளது: அமைச்சர் ஆர் பி உதயகுமார் 

DIN

சென்னை மாநகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் அரசின் தீவிர கண்காணிப்பில் உள்ளன என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

திருவொற்றியூர் மண்டலத்தில் மாநகராட்சி சார்பில் 485 களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் ஆக்சிஜன் கண்டறியும் கருவி கபசுரக் குடிநீர் பாக்கெட் போன்றவற்றை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கரோனா வைரஸ் நோயை தடுக்க தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களை நியமித்து உள்ளார். இவர்கள் மேற்பார்வையில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூர் மண்டலத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மேற்பார்வையில் 485  பணியாளர்கள் வணிகன் ஈடுபட்டு வருகிறார்கள். 

சென்னையில் 85 இலட்சம் மக்கள் உள்ளனர். 200 வார்டுகள் உள்ளது 15 மண்டலங்களில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில் 7500 தெருக்களில் தொற்று உள்ளது. தீவிர கண்காணிப்பில்  ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். தற்போது இது 2.5 லட்சமாக மாறியுள்ளது. தினசரி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா வேறு ஏதேனும் அறிகுறி உள்ளதா என்பதை தினசரி ஆய்வு செய்து வருகின்றனர். மைக்ரோ லெவல் திட்டத்தின்படி தொற்று உள்ள பகுதியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக களப்பணியாளர்கள் செல்கின்றனர். 7.30 மணிக்கு அவர்கள் பணிகளை தொடங்குகின்றனர். 

இதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சேவை மனப்பான்மையுடன் இந்த பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்புதான் முக்கியம் என்பது நமக்கு தெரியவருகிறது. முகக்கவசம் சமூக இடைவெளி அடிக்கடி கை கழுவுதல் கண்டிப்பாக இருக்க வேண்டும். நமக்கு இந்த நோய் வராது என யாரும் குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம். 100% விழிப்புணர்வுடன் இருங்கள் தினசரி 37 வருவாய் மாவட்டங்களிலுள்ள ஆட்சியாளர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்து வருகிறார். மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தீவிர கண்காணிக்கப்பட்டு நோய்த்தொற்று உள்ளவர்களையும் அவர்கள் தொடர்புகளையும் கண்டுபிடித்து அதை சரிசெய்ய இந்த ஊரடங்கு  உதவும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அதிகாரி சுதன் வண்ணாரப்பேட்டை காவல் துறை ஆணையர் ஜி .சுப்புலட்சுமி, ஆதிமூலம், மண்டல அலுவலர் பால்தங்கதுரை, முன்னாள் எம்எல்ஏ கே குப்பன், பி.ராஜேந்திரன், கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

வெடிவிபத்துகளுக்கு முற்றுப்புள்ளி...

சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: கேசராபட்டி சி.டி.பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

SCROLL FOR NEXT