தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு: குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அவலம்

DIN


சீர்காழி அருகே கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் பயனற்று செல்லும் குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சுற்றியுள்ள கடலோர கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கபட்டு வருகிறது. கடும் வறட்சியால் போதிய தண்ணீர் இல்லாமல் கடலோர கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீர்காழி அருகே  நாராயணபுரம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாள்களாக தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் அருகில் உள்ள வாய்க்காலில் செல்கிறது. இதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கபடாததால் பயனற்று வாய்க்காலில் செல்லும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். 

தண்ணீர் அதிகம் விரையமாவதால் கடலோர கிராமங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வாய்க்காலில் செல்வதும் விவசாயம் செய்யபடுவதும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாராயணபுரத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தடையின்றி தண்ணீர் வழங்க கடலோர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT