குள்ளப்ப கவுண்டன்பட்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: போடி அணி வெற்றி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் போடி அணியினர் வெற்றி பெற்றனர்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் போடி அணியினர் வெற்றி பெற்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் கிரிக்கெட் கிளப் மற்றும் வேதா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியும் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் மாவட்டத்திலிருந்து 10 அணிகள் கலந்து கொண்டன. இரண்டு சுற்றாக நடைபெற்ற போட்டியில், புள்ளி பட்டியலில் முதல் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.
அதில் போடி டிராகன் அணியினர் முதல் பரிசை வென்றனர். ஜி.எம்.சி.சி. அணியினர் இரண்டாவது பரிசையும், கம்பம் கிரிக்கெட் கிளப் மற்றும் ட்ரிபிள் கே அணியினர் மூன்றாவது பரிசையும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் கேடயங்களை பள்ளி தாளாளர் நா. வெங்கடேசன், பின்னர் ஸ்போர்ட்ஸ் அலீம், மியூசிக் ஸ்டார் பா.செந்தில்நாதன் ஆகியோர் வழங்கினர்.
இப்போட்டியை வேதா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கம்பம் கிரிக்கெட் கிளப் அணியின் முன்னாள் வீரர்கள் இணைந்து நடத்தினர்.