தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்: பொதுமக்கள் கடும் அவதி

DIN


மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கி பாதையில் ஏராளமான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இடதுகரையில் உபரி நீரை வெளியேற்ற உபரி நீர் போக்கி அமைக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பியதும் கூடுதலாக வரும் தண்ணீரை அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் உபரி நீர் போக்கி பாதையில் பல இடங்களில் குட்டையாக தேங்கி நிற்கும். அவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகளில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த குட்டைகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

தற்போது இப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் செத்து மிதப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். செத்து மிதக்கும் மீன்களில் ஜிலேபி, அரஞ்சான், ஆரால், கெழுத்தி உள்ளிட்டவை.  மீன்கள் செத்து மிதப்பதால் தங்கமாரிபட்டினம், சேலம் கேம்ப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT