தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு தொற்று உறுதி

DIN

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,28,859 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19,906 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக 19,906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 410 போ் உயிரிழந்தனா். மொத்த உயிரிழப்பு 16,095 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை மொத்தம் 3,09,713 போ் குணமடைந்த நிலையில், நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,03,051 ஆக உள்ளது. 

மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,59,133 போ் பாதிக்கப்பட்டுள்ளனர், 84,245 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 7,273 பேர் பலியாகியுள்ளனர்.  தில்லியில் 80,188 போ் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் ஜூன் 27 வரை 82,27,802 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 2,31,095-க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT