தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் மரணங்கள்: திருவாடானையில் மார்க்சிய கம்யூ. ஆர்ப்பாட்டம்

DIN

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தைக் கண்டித்து திருவாடானையில் மார்சிஸ்ட கம்னியூஸ்ட் கட்சியனர் கண்டன் ஆர்பாட்டம் நடத்தினர்.

தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக கடந்த 26ஆம் தேதி  காவல் துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாடானை நான்கு சாலை  சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 

இதில் தாலுகா உறுப்பினர் நாகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமன் சிறப்புரை ஆற்றி கண்டன உரை நிகழ்த்தினார். இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தான்குளம் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT