முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா அச்சுறுத்தல்: மார்ச் 31 வரை ஆந்திரம் மாநில போக்குவரத்து சேவை நிறுத்தம்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அனைத்து பேருந்து சேவைகளும் மார்ச்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:15 PM
பகிர்:


கிருஷ்ணா (ஆந்திரம்): கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அனைத்து பேருந்து சேவைகளும் மார்ச் 31 வரை நிறுத்தம் செய்யப்படுவதாகவும், மற்ற போக்குவரத்து வாகனங்களும் கட்டுப்படுத்தப்படும் என ஆந்திரம் மாநில போக்குவரத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா அறிவித்துள்ளார்.  

கரோனா வைரஸ் தோற்றுவாயான சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இத்தாலியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,476 ஆக உயர்ந்துள்ளது. 5,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கரோனா வைரஸ் தோற்றுவாயான சீனாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,270 ஆக உள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

உலகயளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 14,641 ஆக உயர்ந்துள்ளது. 3,36,000 பேருக்கு மேல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 416 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அனைத்து பேருந்து சேவைகளும் மார்ச் 31 வரை நிறுத்தம் செய்யப்படுவதாகவும், மற்ற போக்குவரத்து வாகனங்களும் கட்டுப்படுத்தப்படும் என ஆந்திரம் மாநில போக்குவரத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா அறிவித்துள்ளார்.  

ஆந்திரம் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திரம் அரசு எடுத்து வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு பேருந்து சேவைகள் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.  மற்ற போக்குவரத்து வாகனங்களும் கட்டுப்படுத்தப்படும். இந்த காலகட்டத்தில் ஆட்டோக்கள் மற்றும் டெம்போக்கள் இயக்கப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆந்திரத்தில் கரோனா வைரஸுக்கு மேலும் 49 வயதான பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →