தற்போதைய செய்திகள்

வெறிச்சோடியது கிழக்கு கடற்கரை சாலை

DIN

புதுச்சேரி தமிழக எல்லைகள் மூடியதால் புதுச்சேரி காலா பட்டில் கிழக்குக் கடற்கரைச் சாலை வெறிச்சோடியது.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவால் தமிழகம் புதுச்சேரி மாநில எல்லைகள் கணபதி செட்டிகுளத்தில் நள்ளிரவு முதல் மூடப்பட்டதால் இருமாநில முக்கிய சாலையான கிழக்கு கடற்கரை சாலையில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் அனுமந்தை என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் ஊழியர்களின் வாகனங்கள் எதுவும் இல்லாததால் அதுவும் மூடப்பட்டுக் கிடந்தது. தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கீழ்புத்துப்பட்டு அனுமந்தை ஆகிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மேலும் மருத்துவமனை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பிறகே அனுமதிக்கப்படுகிறது இதேபோல் புதுச்சேரி மாநில எல்லையான கணபதி செட்டிகுளத்தில் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது. இதனால் தமிழகம் புதுவை இடையே பொதுமக்கள் இன்றி வாகனங்கள் என்று முழுமையான ஒத்துழைப்பை மத்திய அரசின் உத்தரவுக்கு பின்பற்றப்படுவதாக தெரியவருகிறது. இருந்தபோதிலும் இரண்டு பேர் மூன்று பேருக்கும் மேல் சாலையில் நடந்து சென்றாலோ அல்லது நின்று கொண்டு இருந்தாலும் போலீஸார் விரட்டி அடித்து வருகிறார்கள்.

இருந்தபோதும் பொதுமக்களின் நலன் கருதி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT