தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்தனர்

DIN

புணே: மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் முதலில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் சிகிச்சைக்கு பின்னர் இரண்டும் மீண்டும் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்புக்கு எதிர்மறையான முடிவுகள் தெரிவந்துள்ளது. 

இதையடுக்கு அவர்கள் இரண்டு பேரும் இன்று புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள் என்று புணே மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.

மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அறிக்கையின்படி,  மகாராஷ்டிராவில் மேலும் 6 பேர் கரோனா வைரஸுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. 

 இந்தியாவில் மகாராஷ்டிராவில் தான் கரோனா வைரஸுக்கு அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் இதுவரை 536 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT