தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் வாரணாசி மக்களுடன் உரையாடுகிறார்

DIN

புதுதில்லி: கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதி வாரணாசி மக்களுடன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு விடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுகிறார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: "கரோனா வைரஸ் தொற்றால் எழும் பாதிப்பு, தடுப்பு குறித்து எனது வாரணாசி தொகுதி மக்களுடன் புதன்கிழமை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு விடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடடுகிறேன். உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை இருந்தால் அல்லது இதுதொடர்பான கேள்வி இருந்தால், அதனை நமோ ஆப் மூலம் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரண்டு தினங்களாக மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். 

மேலும்,  குடிமக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT