தற்போதைய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

DIN


சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்த நிலையில், மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்தநிலையில், தமிழகத்தில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT